மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள். ஆனால், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலி வாலைபிடித்து படம் வெளியிட்டுள்ளார் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.
இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள், மதுரையில் எந்த தொழிலும் இல்லாத நிலையில் மெட்ரோ வந்து என்ன பயன் என்றும், தொழில்பேட்டை தொடங்குங்கள் ஆஹா ஓஹோ என பாராட்டப்படும் என தெரிவித்தார்.
செல்லூர் ராஜுவின் கேள்விக்கு பதிலளித்த, அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே அண்ணனை பார்த்து ஆகா ஓகோ என்றுதான் பாராட்டுகிறார்கள். மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள். ஆனால், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலி வாலைபிடித்து படம் வெளியிட்டுள்ளார்.
இதிலிருந்து அண்ணனின் வீரம் தெரிகிறது என்று தெரிவித்தார். இதனால் அவையில் சிரிப்பொலி ஏற்பட்டது. தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதல்வர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும், மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்க முதலமைச்சர் அறிவித்துள்ளதாகவும் , மதுரையில் நிச்சயமாக புதிய தொழில் பேட்டை தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…