அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்று பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகத்தான் தலைமை, அதில் மாற்றமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டினால் தான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என கூறிருந்தார்.
இதுபோன்று, பாஜக மாநில தலைவர் எல் முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறியது பாஜக – அதிமுக அமைச்சர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்று பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…