நாங்கள் கேட்பதை விட அவர்கள் கொடுப்பது குறைவாக உள்ளது – மார்க்சிஸ்ட்

தொகுதி பங்கீடு குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக இன்னும் அழைக்கவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் இறுதி முடிவு எட்டவில்லை. இன்று செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வரும் சட்டமன்ற தேர்தலில் 3வது அணிக்கே வாய்ப்பு இல்லை என்றும் கமல் கூட்டணி பற்றி யோசிக்கவே இல்ல எனவும் கூறியுள்ளார்.
மேலும் நாங்கள் கேட்ட தொகுதிகளை விட திமுக அளிக்கும் தொகுதிகள் மிகவும் குறைவாகத் தான் உள்ளது. தொகுதி பங்கீடு குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக இன்னும் அழைக்கவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.