தமிழர்களை பிளவுப்படுத்தும் கருவியாக மதத்தை பயன்படுத்துகிறார்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழர்களை பிளவுப்படுத்தும் கருவியாக மதத்தை பயன்படுத்துகிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
சென்னையில் தனியார் ஓட்டலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,1938 முதல் இன்று வரை தமிழ் காப்பு போராட்டங்கள் திமுகவால் நடத்தப்பட்டன. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். இரு மொழிக் கொள்கையை நிறைவேற்றியது திமுக அரசு தான். தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது திமுக அரசு தான்.
தமிழுக்கு பழம்பெருமை இருப்பதால் அது குறித்து தொடர்ந்து பேசு வருகிறோம். அப்படி பேசுவது சிலருக்கு கசப்பாக இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கு அவ்வாறு பேச எந்த பெருமையும் இல்லை. தமிழர்களை பிளவுப்படுத்தும் கருவியாக மதத்தை பயன்படுத்துகிறார்கள். தமிழினத்தை மேம்படுத்தும் எண்ணத்தோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் என்ற கோட்பாடாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.