“எங்களை மிரட்டுறாங்க”…பேனரை அகற்றும் போலீசார்.. கொந்தளித்த தவெக தொண்டர்கள்.!

விஜய்யின் தவெக மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகே நெடுஞ்சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற காவல் துறை உத்தரவு போட்ட காரணத்தால் தொண்டர்கள் வேதனையில் உள்ளனர்.

tvk banner

விழுப்புரம் : விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது. இது கட்சியின் முதல் மாநாடு என்ற காரணத்தால் பல மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மாநாடு வேலைகளும் 80 %  முடிந்துள்ளது. மாநாட்டில் விஜயின் பேச்சையும், அவரை பார்க்கவும் தொண்டர்கள் மகிழ்ச்சியாக காத்துள்ளனர்.

இந்நிலையில், மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், கட்சி தொண்டர்கள் பலரும் தங்களுடைய சொந்த செலவுகளில் பெரிய பெரிய பேனர்களையும் மாநாடு நடைபெறும் இடத்திற்கு வெளியவும், சாலைகளுக்கு அருகிலும் வைத்தனர். இதனையடுத்து, நேற்று திடீரென புறவழிச்சாலையில் இருபுறமும் கட்சியினர் வைத்திருந்த பேனர்களை அகற்றவேண்டும் என போலீசார் உத்தரவிட்டனர்.

அந்த பகுதியில் மட்டுமின்றி அதைப்போல பல பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களும் அகற்றப்பட்டது. இதனால் கோபமான த.வெ.க தொண்டர்கள் பலரும் திடீரென இப்போது வந்து அகற்றவேண்டும் என்று சொன்னால்? என்ன செய்வது என்கிற வைகையில் பேசி வருகிறார்கள். 2 லட்சம் செலவு செய்து பேனர் வைத்ததாக கூறி தொண்டர் ஒருவர் வேதனையுடன் பேசினார்.

இது குறித்து அவர் பேசியதாவது ” நேற்று மதியம் வரை நாளை பேனர் வைத்து கொள்ளலாம் என்பது போல கூறினார்கள். ஆனால், இப்போது வைக்க கூடாது மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு. எனவே, இந்த உத்தரவை பின்பற்றுங்கள். பேனர் வைக்காதீர்கள் என கூறுகிறார்கள். அப்படி வைத்தால் மீண்டும் அகற்றப்படும் என்கிற வகையில் மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.

அதைப்போல மற்றொருவர் “கிட்டத்தட்ட எனக்கு 2 லட்சம் ரூபாய் அப்படியே போய்விட்டது. 2 லட்சம் செலவு செய்து என்னுடைய சொந்த செலவில் பேனர்களை வைத்தேன். அனைத்தும் வேதனையாகிவிட்டது. வைத்த அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்ற கூறிவிட்டார்கள்” என பேசினார்.

அதைப்போல வைரலான அஜித் மற்றும் விஜய் இருவருடைய பேனரையும் ஒன்றாக வைத்த நபர் பேசுகையில் ” சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி வரை பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அது அனைத்தையும் அகற்றவேண்டும் என்ற உத்தரவை திடீரென போட்டுள்ளார்கள். எனவே, எனக்கு சொந்தமாக இடம் இருக்கிறது அந்த பகுதியில் நான் பேனரை வைக்க முடிவு செய்து இருக்கிறேன்” என தெரிவித்தார்.

பேனர் அகற்றப்பட்டு வருவது தொண்டர்களுக்கு வேதனையை கொடுத்த நிலையில், இது குறித்து கட்சி தரப்பில் இருந்து தொண்டர்களுக்கு எதாவது அறிவுரை வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்