மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடைபெற உள்ள அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டின் லோகோ அடங்கிய விளம்பர பதாகைகள் ரிக்ஷவில் பதித்துள்ளோம். எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார். மேலும் கூறுகையில், அதிமுகவை எத்தனை பேர் அழிக்க, முடக்க நினைத்தாலும், அது முடியாத ஒன்று.
அப்படிப்பட்ட கலைஞர் கருணாநிதியால் கூட முடியவில்லை. இதற்கு காரணம் எங்கள் தலைவர்கள், தியாகிகள், தன்னலமற்ற தொண்டர்கள் தான். எதையும் எதிர்பார்க்காமல் கட்சி இருக்கவேண்டும் என்றும் நினைப்பதால் தான் அதிமுக தற்போது நிலைத்து இருக்கிறது. இந்த இயக்கத்தில் இருந்து எத்தனை துரோகிகள் சென்றாலும் சரி, எம்ஜிஆர் கட்சி எங்கே இருக்கிறது, இரட்டை இல்லை எங்கே இருக்கிறது, தலைமை கழகம் எங்கே இருக்கிறது என்பதைத்தான் பார்ப்பார்கள்.
தொண்டர்கள் மட்டுமல்ல எங்களை போன்றவர்கள் கூட இதைத்தான் பார்ப்போம் என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமருக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை?, எனவே, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா தான் எங்களுக்கு முக்கியம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை just like தான் என தெரிவித்தார்.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…