அதிகமான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இவர்களே! ஆய்வில் வெளியான அதிர்ச்சி முடிவு!
தேசிய குற்ற பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 2019-ல் 28% சிறார் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், பள்ளிக்கே செல்லாத குழந்தைகளை விட பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய சிறுவர்கள்தான் அதிக குற்றங்களில் ஈடுபடுவதாகவும், அதிலும் ஆதரவற்றவர்களை விட பெற்றோருடன் வாழும் சிறார்கள் தான் இந்த குற்றங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2019-ல் மட்டும் 3305 சிறார்கள் குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர். அதில் 2470 பேர் ஆரம்பப்பள்ளி அல்லது இடை கல்வி பயின்றவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள் வெறும் 97 பேர் தான். அதில் 2899 பேர் குடும்பத்துடன் வசித்து வருபவர்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 2018-ல் 502 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 2019-ல் 647 சிறார் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதில் 28 % அதிகமாக இருக்கிறது.