தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு இவர்கள் தான் காரணம் ..! ஆய்வில் அதிர்ச்சி ..!

தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் 98 சதவீதம் பேர் அறிமுகமானவர்கள் என மத்திய குற்றப்பிரிவு ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.
கடந்த 2017-ம் ஆண்டில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை மத்திய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் நான்கு வழக்குகள் மட்டுமே அறிமுகமில்லாத நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. மீதமுள்ள 279 வழக்குகள் அதாவது 98.6 சதவீத பேர் அறிமுகமான நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர் என தெரிவித்துள்ளது.