சரியாக புரிந்து கொள்ளாமல் எனக்கு எதிராக பேசி வருகின்றனர்… அண்ணாமலை விளக்கம்.!
எனது பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என அண்ணாமலை தனக்கு எதிரான அதிமுகவின் தீர்மானத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.
நான் பேட்டியில் கூறியதை தவறாகப் புரிந்துகொண்டு எனக்கு எதிராக அதிமுகவினர் கருத்துக்களை கூறிவருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவதூறாக பேசியதாக அண்ணாமலைக்கு எதிராக, இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டசெயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து தனது பேட்டி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என அதிமுகவினரின் விமர்சனத்துக்கு அண்ணாமலை பதில் கூறியுள்ளார். கூட்டணி தர்மம் பற்றி தனக்கு தெரியும், கூட்டணிக்கட்சி பற்றியும் கூட்டணிக்கட்சி தலைவர்களை எப்படி நடத்த வேண்டும் எனவும் தனக்கு பாடம் எடுக்கவேண்டாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவேண்டும் என அரசியலுக்கு வந்துள்ள எனது கனவு, கொள்கைகளை வெளியில் வைத்துவிட்டு அரசியல் செய்யும் எண்ணம் எனக்கில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவினர் தனக்கு எதிராக முன்வைத்துள்ள கருத்துகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் கூறியுள்ளார்.