பஸ்சில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு இவர்கள்தான் பொறுப்பு – போக்குவரத்து கழகம்

Default Image

பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநரின் பொறுப்பு.

பேருந்து படிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிப்பதால், விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அனைத்து பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநரின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டாம் என ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அறிவுறுத்த வேண்டும். அறிவுரைகளை மீறி மாணவர்கள் செயல்பட்டால், காவல் நிலையத்தில் அல்லது அவரச காவல் உதவி எண் 100-ஐ நாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்