அவர்களுக்கு பக்குவம் இல்லை., எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை – முதல்வர் பழனிசாமி

Default Image

தேர்தல் கருத்து கணிப்பு எல்லாம் தவறு, வரும் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெரும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் கூட்டணி கட்சிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்திய பின்னர் ஓமலூரில் செய்தியாளர்களிட பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுகவை பொறுத்தளவில் நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கக் கூடாது என்று தான் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் கிடையாது. அதிமுக பேட்பாளர்களுக்கு சில இடங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனை சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்னும் படித்து பார்க்கவில்லை, படித்து பார்த்த பிறகு தான் கருத்து கூற முடியும். புதுச்சேரி தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவாரத்தை நடத்தி வருகிறது. புதிய தமிழகம் கட்சி அதிமுகவில் இல்லை, அவர்கள் ஏற்கனவே கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறிவிட்டார்கள் என கூறியுள்ளார்.

கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பக்குவமில்லாத அரசியலை தான் நான் கருதுகிறேன். ஒரு கூட்டணியில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தனியாக தேர்தலில் போட்டியிடுவது தவறல்ல, ஆனா, ஒரு கட்சி மீதி பழி சுமத்துவது தவறு என்றும் ஒரு கட்சியின் பலம், பலவீனம் பொறுத்துதான் சீட்டு ஒதுக்கீடு செய்ய முடியும் எனவும் கூறியுள்ளார்.

தேர்தல் அறிக்கை வருவதற்கு முன்னதாக மக்களின் தேவைகளை புரிந்து நடைமுறை படுத்திய அரசு தான் அதிமுக. விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் ரத்து செய்யப்படும் என்று அறிவித்து, உடனே அமல்படுத்திய கட்சி அதிமுக என்று தெரிவித்துள்ளார். தேர்தல் கருத்து கணிப்பு எல்லாம் தவறு, வரும் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெரும் என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

SRHvsMI
Ajith Kumar Racing
ponmudi - highcourt
Vijay -Waqf Amendment Bill
Munaf Patel FINE
Dhankar