கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்.
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டிமிடுவதற்கான தகுதி மற்றும் தகுதியின்மையில் கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் போட்டியிடுவது குறித்து ஏதும் வரையறை செய்யப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டக்கூறு 12-ல் “மாநிலம்” என்ற வரையறைக்குள் கூட்டுறவு சங்கங்கள் கொண்டு வரப்படாததால் கூட்டுறவு சங்க அலுவலர்கள் அல்லது மாநில அரசின் கட்டுப்பாட்டில் அல்லது மாநில அரசுக்கு உட்பட்ட பெருநிறுவனத்தைச் சார்ந்த அலுவலர்கள் அல்லது பணியாளர்களாக கருத இயலாது.
உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மக்கள் பிரதிநிதிகளாவர். கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் தொடர்புடைய சங்கத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆவர். கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர்களாக பொறுப்பு வகிக்கும் நபர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் நேர்வில் அவர் மக்கள் பிரதிநிதியாக இரண்டு பதவிகளில் பொறுப்பு வகிப்பதாக கருத இயலாது.
எனவே, கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை ஏதும் இல்லை என்றும் ஓய்வூதியதாரர்கள், அரசின் உதவித் தொகை பெறுபவர்களும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை ஏதும் இல்லை எனவும் மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…