“தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ,மக்களை திசை திருப்புகிறார்கள்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
வெள்ளை அறிக்கை வெளியிடுவதன் மூலம்,தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல்,திமுக அரசு மக்களை திசை திருப்புகிறார்கள் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், இன்று காலை 11:30 மணியளவில் தலைமை செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு,இது தொடர்பான விளக்கத்தையும் அளித்தார்.
இந்நிலையில்,வெள்ளை அறிக்கை வெளியிடுவதன் மூலம்,தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல்,திமுக அரசு மக்களை திசை திருப்புகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளரிடம் காணொளி வாயிலாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
“வெள்ளை அறிக்கை வெளியிட்டு,தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல்,திமுக அரசு மக்களை திசை திருப்புகிறது சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில்,முன்கூட்டியே வெள்ளை அறிக்கை வெளியிடுவது ஏன்?”,என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும்,2006 – 2011 ஆம் ஆண்டு வரையிலான வெள்ளை அறிக்கையை திமுக அரசு கொடுக்க வேண்டும்.2010- 2011ஆம் ஆண்டில் திமுக அரசின் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் மாநிலத்தின் சொந்த வருவாய் 8.17% ,ஆனால்,அதிமுக ஆட்சிக்காலத்தில் 8.34% ஆக இருந்தது என்று குறிப்பிட்டார்.
மேலும்,சொத்து வரி,போக்குவரத்து வரியை அதிமுக உயர்த்தவில்லை?யாரிடம் வரியை வாங்குவது என்று அதிமுக அரசுக்கு தெரியவில்லை என்று திமுக அரசு கூறியது,இது தொடர்பாக நீங்கள் கூறுவது என்ன? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் அவர்கள்,”அதிமுக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் திமுக அரசு உயர்த்த போவதாக சொல்கிறதா? என்று கூறினார்.மேலும்,முன்னதாக திமுக அரசு ஆட்சி பொறுப்பில் இருந்தபோது விட்டுசென்ற கடனுக்கு,அதன்பின் பொறுப்பேற்ற அதிமுக அரசுதான் வட்டி கட்டியது”,என்று தெரிவித்துள்ளார்.