கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கின்றார்கள் – ரஜினி குறித்து மு.க.ஸ்டாலின் மறைமுக கருத்து
சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கின்றார்கள் என்று ரஜினி குறித்து மு.க.ஸ்டாலின் மறைமுக கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்வதாக ரஜினி அறிவித்தார்.
இதனிடையே இன்று திமுக மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் – ஒன்றிய, நகர,பகுதி,பேரூர்க் கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,திமுக வெற்றியை தடுக்க பல முனைகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.அதில் ஒன்று “சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கின்றார்கள்” என்று ரஜினி குறித்து மு.க.ஸ்டாலின் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.