இவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வகுப்புகள் நடத்த அனுமதி – கல்வித்துறை அறிவிப்பு
சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த கல்வித்துறை அனுமதி.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கி கல்வித்துறை அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி வாழங்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அமைச்சர் அறிவித்த நிலையில், கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் எச்சரிக்கையை மீறி, 10,11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரை தினந்தோறும் காலை, மாலையில் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த அனைத்து வகை பள்ளிகளுக்கும், திருவள்ளூர் மாவட்ட CEO அனுமதி வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.