மறுஉத்தரவு வரும் வரை இவைகளுக்கே தடை தொடரும்.. அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பொது முடக்கத்தின் 4-ஆம் கட்ட தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
அதன்படி, இனி தமிழகத்தில் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இ-பாஸ் ரத்து , சென்னையில் மெட்ரோ ரயில்கள் செப்டம்பர் 7 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மறுஉத்தரவு வரும் வரை சிலவற்றிற்கு தமிழக அரசு தடை தொடரும் என அறிவித்துள்ளது. அதன்படி,
- பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்விநிறுவனங்கள் இயங்க தடை .எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதோடு, அதை ஊக்குவிக்கலாம்.
- திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் (Entertainment Amusement Parks), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை.
- மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
- புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து (Suburban trains)
- மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள் கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
தமிழ் விழித்தது., தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது – மு.க.ஸ்டாலின் பதிவு
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025