மறு உத்தரவு வரும்வரை இவைகளுக்கு தடை தொடரும்.. அரசு அதிரடி உத்தரவு.!

Published by
murugan

இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்வர் பழனிசாமி  ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை முடிந்த  நிலையில்,  தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை இருந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பல்வேறு கட்டுப்பாடுகளும், தளர்வுகளுடனும்  தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மறு உத்தரவு வரும்வரை இவைகளுக்கு தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

  • மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுதலங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் உள்ள மிகப்பெரிய வழிபாட்டு தலங்ககளிலும் பொதுமக்கள் வழிபாடு கிடையாது.
  • அனைத்தும் மதம் சார்ந்த கூட்டங்கள்.
  • நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடரும்.
  • தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு மட்டும் விலக்குஅளிக்கப்படுகிறது.
  • வணிக வளாகங்கள் (Shopping Malls)
  • பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் திறக்க அனுமதி இல்லை. எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதோடு அதனை ஊக்குவிக்கலாம்.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
  • மெட்ரோ ரயில் / மின்சார ரயில் தடை நீடிக்கும்.
  • திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (Bar), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுமதி இல்லை.
  • அனைத்து வகையான சமுதாய, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை.
  • மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.
Published by
murugan

Recent Posts

ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…

10 minutes ago

Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!

சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…

51 minutes ago

நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!

காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே  இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…

54 minutes ago

தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…

2 hours ago

சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…

2 hours ago

தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

2 hours ago