இந்த விடியா ஆட்சியாளர்கள் தமிழகத்தை பிரித்து மேய தொடங்கி இருக்கிறார்கள் – ஈபிஎஸ்

Default Image

நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை பயன்பாட்டு மாற்றம் செய்யும் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல். 

நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை பயன்பாட்டு மாற்றம் செய்யும் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஈபிஎஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், பத்து ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள இந்த விடியா ஆட்சியாளர்கள், காய்ந்த மாடு கம்பம் கொல்லையில் பாய்ந்தது போல, தமிழகத்தை பிரித்து மேயத் தொடங்கி இருக்கிறார்கள்.

“கொள்ளை அடிப்பது ஒரு கலை, கொக்கு, மீனை கொத்தாமல் இருந்தால்; புலி, ஆட்டை அடிக்காமல் இருந்தால்; பாம்பு, தவளையை விழுங்காமல் இருந்தால்…. நானும் கொள்ளை அடிக்காமல் இருப்பேன்” என்று வசனம் எழுதியவரின் வாரிசுகள், தமிழகத்தின் நானிலத்தையும் கூறுபோட்டு விற்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது கண்டு மக்கள் கொதிப்படைந்து போயிருக்கிறார்கள்.

மாண்புமிகு அம்மா ஆட்சியிலும், தொடர்ந்து அம்மாவின் அரசிலும் நில அபகரிப்பு மாபியாக்களின் கொட்டம் அடக்கப்பட்டது. அப்போதைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான அபகரிப்பு நிலங்கள், பறிமுதல் செய்யப்பட்டு சொத்தை இழந்த அப்பாவி மக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

ஆனால் இப்போது, அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில் ஆட்சியாளர்களின் ஆக்டோபஸ் கரங்கள், தனியார் நிலங்களை மட்டுமல்ல, அரசு நிலங்களையும் ஆக்கிரமிப்பதாக செய்திகள் வருகின்றன. குறிப்பாக, நீர்வழி புறம்போக்கு நிலங்களை ஆளும் கட்சியினர் ஆக்கிரமித்து வருகின்றார்கள்.

நீர்வழிப் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், மழைக் காலங்களில் சென்னை மாநகரில் ஏற்படும் பெரும் வெள்ள பாதிப்புகளைக் களைய, சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை அவ்வப்போது பிறப்பித்து வருகிறது.

தும்பை விட்டுவிட்டு, வாலைப் பிடிப்பது போல, ஏற்கெனவே நீர்வழி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய பல உத்தரவுகளை மனதில் கொண்டு, புழல் ஏரியை ஒட்டி நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில், குறிப்பிட்ட சில தனியார் நிறுவன பயன்பாட்டுக்கு மாற்றலாம் என வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை சமீபத்தில் வழங்கிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.

இந்த ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்களுக்கு, அதிகாரிகளும் துணை போவதைக் கைவிட்டுவிட்டு நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். மக்கள் விரோதப் போக்கை இந்த விடியா அரசு கைவிடாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்