இனி மாணவர் சேர்க்கையின் போது இந்த வாக்கியங்கள் பயன்படுத்தப்படாது – தமிழ்நாடு அரசு

Default Image

பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையின்போது மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும் என அறிவிப்பு.

பல்கலைக்கழக சட்டம்:

annauniversity25

பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பின்வரும் சட்டமானது 2023-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி அன்று ஆளுநரின் ஏற்பிசையை பெற்றது மற்றும் அது பொது தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது.

பல்கலைக்கழக திருத்தம் சட்டம்:

இந்த சட்டம் 2022-ஆம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழக திருத்தம் சட்டம் என வழங்கப்படுகிறது. அதன்படி, பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையின்போது காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் இனி பயன்படுத்தப்படாது என்றும் மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tngovt25

மாற்றுத்திறனாளிகளின் வகை:

handycape

எனவே, இந்த சட்ட திருத்தத்தின் மூலம், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையின்போது, மாற்றுத்திறனாளிகளின் வகை கேட்கப்படாது, மாற்றுத்திறனாளி என்று மட்டுமே குறிப்பிட்டு சலுகைகளை கோரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்