இந்த இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிடமாற்றம் கிடையாது – பள்ளிக்கல்வித்துறை

DPI

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்தவரையில், அவர்கள் நியமிக்கப்பட்ட பள்ளியில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதன்பின், அவர் மற்ற இடத்திற்கு பணிமாற்றம் வேண்டி விண்ணப்பிக்கலாம். இந்த நடைமுறை தான் தொடர்ந்து காணப்படுகிது.

இந்த நிலையில், வட மாவட்டங்களை பொறுத்தவரையில், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளன. இதனையடுத்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களை இங்கு பணியமர்த்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் : நாடாளுமன்றத்தில் தீக்குளிக்க திட்டம்.? டெல்லி போலீசார் அதிர்ச்சி தகவல்.!

தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி,  குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை  ஆகிய மாவட்டங்களில் பணியில் சேரும் போதே, பணியாணையில் குறிப்பிட்ட 5 ஆண்டுகள் பணிமாறுதல் கிடையாதது என்ற நிபந்தனையுடன் தான் பணியனை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்