பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் தகவல்.
தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில், திட்டமிட்டபடி வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகள் திறப்பு தேதியில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை, தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-32-ஆம் கல்வி ஆண்டுக்காக வரும் 13-ஆம் தேதி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். 13-ஆம் தேதி பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மாணவ, மாணவிகளுக்கு நல்லது, கேட்டது எடுத்துச்சொல்ல முதல் 5 நாட்கள் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும். இதன்பிறகு, மற்ற வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். இதனால் மாணவர்கள் கட்டாயம் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், ஜூலை, செப்டம்பர் மாதம் அடுத்தடுத்த தேர்வுகள் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறையால் அறிவிக்கப்படும் வரும் தேர்வுகளில் மாணவர்கள் அப்சென்ட் ஆகாமல் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…