“இவர்கள்தான் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Default Image

சென்னை:தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் 19 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது:

“சென்னையில் 1600 இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணிவரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.மேலும்,15-18 வயதுடைய சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 2,580 ஊராட்சிகளில் 100% ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக,சென்னையில் 94.19% பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.மேலும்,1,71,616 சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த 6% பேர் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மீதம் உள்ள 94% சதவீதம் பேர் வீட்டுத்தனிமையில் இருக்கின்றனர். மேலும்,தமிழகத்தில் கொரோனா இறப்பு சதவீதம் மிக்குறைவாக இருப்பது மன நிறைவாக உள்ளது.

எனினும்,கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளதவர்கள் தான் தற்பொழுது இறப்பு விகிதம் ஏற்படுகிறது.மாறாக,தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் பின்விளைவுகள் ஏற்பட்டு உள்ளது என்ற எந்த புகாரும் வரவில்லை. எனவே, தைரியமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

அதே சமயம்,உருமாற்றம் அடைந்த கொரோனா உட்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும்,முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை உண்டு”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்