எப்போதும் என்னை சுறுசுறுப்பாக வைத்து இருப்பவர்கள் இவர்கள் தான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Tamilnadu CM MK Stalin

சென்னையில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவின் பேச்சு போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார். கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் பரிசு வழங்கினார்.

இதன்பின் இவ்விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின், எப்போதும் என்னை சுறுசுறுப்பாக வைத்து இருப்பவர்கள் மாணவர்களும், இளைஞர்களும் தான். இந்த பேச்சு போட்டிகளின் மூலம் அடையாளம் காணப்பட்ட இளம் பேச்சளர்கள் தான் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பரிசு.

பேச்சாற்றலை நம் தமிழ் நிலம் பயண்படுத்திக் கொண்ட வரலாற்றை அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும். திராவிட இயக்கம் என்பதே பேசியும், எழுதியும் வளர்ந்து இருக்கக்கூடிய இயக்கம்.  திமுக கூட்டங்களை மாலை நேர கல்லூரிகளில் என்று அழைப்பது உண்டு. இளம் பேச்சாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்.

மாணவர்களே ஒற்றுமை, நல்லிணக்கம், மனித நேயத்தை போற்றுங்கள், எண்ணங்களை அழுக்காக்கும் எண்ணங்களை புறந்தள்ளுங்கள என்றார். மேலும், சிறுபான்மையினர் நலனுக்காக ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இஸ்லாமியர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம் சுயமரியாதை, பகுத்தறிவு என தனி அடையாளம் உண்டு. பண்பட்ட தமிழ் அறிவை எல்லா மாணவர்களும் பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்