இவர்கள் தான் பிஜேபி-க்கு ‘பீ’ டீம்…! கமல்ஹாசன் காட்டம்…!

காங்கிரசிற்கு இடத்தை குறைத்து கொடுப்பவர்கள் தான் பிஜேபி-க்கு ‘பீ’ டீம் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளிலும் தர்தல் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் மக்காள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், சென்னை தேரடியில் வாக்கு சேகரித்த கமலஹாசன், வேலையாய் தேடி இளைஞர்கள் செல்லாமல், இளைஞர்களை தேடி வேலை வர வேண்டும் என கூறினார். பின், என்னை பார்த்து பாஜக-வின் பீ டீம் என கூறிய போது, எனக்கு வந்த கோபத்தை அடக்கி வைத்திருந்தேன்.
காங்கிரஸ் கட்சியை இல்லாமல் செய்ய வேண்டும் என்பது தான் பாஜகவின் மனக்கோட்டை. ஆப்பாடி அவர்கள் செய்யும், அதே காங்கிரசுக்கு போதிய இடங்கள் கொடுத்து கௌரவிக்காமல், காங்கிரசிற்கு இடத்தை குறைத்து கொடுப்பவர்கள் தான் பிஜேபி-க்கு ‘பீ’ டீம் என தெரிவித்துள்ளார்.