எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் 5 உத்திரவாதங்கள் இதுதான்.! ப.சிதம்பரம் விளக்கம்.!
Congress : வரும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி சார்பாக 5 வாக்குறுதிகளை அக்கட்சி இளம் தலைவர் ராகுல் காந்தி முன்னதாக அறிவித்து இருந்தார். அதனை இன்று தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளார் .
அவர் கூறுகையில், மத்திய அரசு மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. உ.பியில் அண்மையில் நடைபெற்ற காவல்துறை தேர்வில் 48 லட்சம் பேர் எழுதினார்கள். அடுத்த 2 நாள் கழித்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவித்தனர்.
Read More – இதுதான் தவெகவின் நிலைப்பாடு… தனது கட்சியின் உறுதிமொழியை அறிவித்தார் தலைவர் விஜய்!
இதனை நிவர்த்தி செய்ய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்த உடன் 30 லட்சம் காலியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்வோம். அடுத்து, படித்தவர்கள் பயிற்சி பெறுவது அவர்கள் உரிமை என்ற அடிப்படையில், டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் ஆண்டுக்கு ஒரு லட்ச ருபாய் ஊக்கத்தொகை அளித்து அவர்களுக்கு அப்ரண்டீஸ் பயிற்சி அளிக்க வேண்டும் என சட்டம் இயற்றப்படும். தனியார், பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையில் 1 சதவீதம் அப்ரண்டீஸ் எடுக்க வேண்டும் என அந்த நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
அடுத்து , தேர்வு தாள் கசிவு தடுக்கப்டும். தேர்வு தாள் கசிவால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உ.பி காவலர் தேர்வானது, தாள் கசிந்துவிட்டது என கூறி ரத்து செய்து விட்டார்கள். அடுத்து 10 லட்சம் விண்ணப்பதாரர்கள் எழுதிய ஒரு அரசு தேர்வும் ரத்து செய்யப்படுகிறது. இதனை தடுத்து, யார் மூலம் தேர்வு தாள் கசிகிறதோ அவர்களிடம் இருந்து பெருந்தொகை இழப்பீடாக பெற்று அது மாணவர்களுக்கு அளிக்கப்படும்.
Read More – தோழர்களாய் ஒன்றிணைவோம்…முதல் வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்.!
ஸ்விகி, உபர் ஊழியர்களுக்கு நிரந்தர வேளை கிடையாது. இப்போது ஆன்லைம் கலாச்சாரம் நிறைய பெருகிவிட்டது. அவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. முதலில் அவர்களுக்கான சட்ட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
புதிய தொழில்களை தொடங்க இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். மைக்ரோசாப்ட் ,ஆப்பிள் கூகிள் ஆகிய நிறுவனங்கள் எல்லாம் சிறிய ஸ்டார்ட் அப் தொழில்களாக ஆரம்பிக்கப்பட்டவை ஆகும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் 10 கோடி வீதம் பிரித்து கொடுப்போம் . பல தொகுதிகளில் தலித், சிறுபாண்மையினர்கள், மலைவாழ் இளைஞர்கள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர்.
Read More – கொலை வழக்கில் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது – ஐகோர்ட்
இதுதான் எங்கள் இளம் தலைவர் ராகுல்காந்தியின் 5 கியாரண்டி. இதனை வைத்து நாங்கள் பிரச்சாரம் செய்வோம். இந்தியா முழுக்க 8 சதவீதம் பேருக்கு வேலை இல்லை. 100 பட்டதாரிகளில் 42 பட்டதாரிகளுக்கு வேலை இல்லை. மத்திய அரசு இதனை குறைத்து கூறி வருகிறது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறினார்.