“தமிழகத்தில் இவை அவசியம்”-மரக்கன்றுகளை நட்டு வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Default Image

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் 3 வது நாளாக மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு தற்போது தொடங்கியுள்ளது.இந்த மாநாட்டில் வனத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில்,சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் முன்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார்.

சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகை அருகே பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நட்டு வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் மரக்கன்றுகளை நட்டு வைப்பது அவசியம்.வப்பரப்பு அதிகரிப்பு இன்றைய மனித குலத்திற்கு மட்டுமல்ல வருங்கால சந்ததியினருக்கும் அவசியமாகிறதுஎன்று முதல்வர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக,நேற்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் அவர்கள்,ஒரு ரூபாய் செலவு செய்தால், அந்த ஒரு ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் எனவும்,விளிம்புநிலை மனிதர்கள், சிறுபான்மையினர், பட்டியலின பழங்குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்