காய்ச்சல் தலைவலி என படுத்தாலும் இவர்களே எனக்குத் துணை! – திருமாவளவன்

Default Image

எமக்குள் தலைவன்-தொண்டன் உறவில்லை; அண்ணன்-தம்பி உறவே! இயக்கமே எனது குடும்பம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் குடியிருப்புக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. எனவே திருமாவளவன் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து காரில் ஏறும் பொழுது தனது ஷூ நனைந்து விடக்கூடாது என்பதற்காக அவரது தொண்டர்கள் உதவியுடன் நாற்காலி மீது நடந்து வந்து காரில் ஏறி சென்றுள்ளார்.

இந்த சம்பவம் பேசும் பொருளாகியுள்ள நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த திருமாவளவன் அவர்கள், தொண்டர்களை ஒருபோதும் மரியாதை குறைவாக நடத்தும் எண்ணம் எனக்கில்லை. என்னுடைய கால்கள் சேறு, சகதியை பார்க்காததில்லை. டெல்லி கிளம்புவதற்காக புறப்பட்டபோது ஷூ, ஷாக்ஸ் அணிந்திருந்ததாகவும், அது மழை நீரில் நனைந்துவிட்டால், 3 மணி நேரம் விமானத்தில் அப்படியே பயணிக்க முடியாது என்பதற்காக தொண்டர்கள் உதவியுடன் இரும்புச்சேர் மீது நடந்து காரில் ஏறிச் சென்றதாக விளக்கமளித்தார்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘#ஆணவம் : அது என் இயல்பு இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனால், இது அவர்களுக்கு ஒரு வாய்ப்பு. இயக்கத்தில் எமக்குள் தலைவன்-தொண்டன் உறவில்லை; அண்ணன்-தம்பி உறவே! இயக்கமே எனது குடும்பம்! இயக்கத் தோழர்களே எனது உறவினர்கள். காய்ச்சல் தலைவலி என படுத்தாலும் இவர்களே எனக்குத் துணை!’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்