இந்த 10 மாவட்டங்களில் இன்று, நாளை வெயில் வெளுத்து வாங்கும் .!
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினமும் 10 மாவட்டங்களில் சுமார் 104 டிகிரி வெயில் கொளுத்தும் என்பதால் அனைத்து மக்களும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிய வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த ஒரு சில நாட்களாகவே 104 டிகிரி வரை வெப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிகபட்சமாக நேற்று மட்டும் திருச்சியில் 104 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது. மதுரை, கரூர், சேலம், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் 102 டிகிரியும், பாளையங்கோட்டை, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பமும் , மேலும் கோவையில் 99 டிகிரியும் சென்னை 97 டிகிரியும் வெப்பமும் நிலவியது.
இந்நிலையில் விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, போன்ற மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை லேசான மற்றும் மிதமான மழை பெய்யும்.
மதுரை, கரூர், சேலம், தஞ்சாவூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் , திருத்தணி , வேலூர், ஆகிய 10 மாவட்டங்களில் இன்றும் மற்றும் நாளை 104 டிகிரி வெயில் கொளுத்தும் என்றும் நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளிய வர வேண்டாம் என்று எச்சரிக்கைபட்டுள்ளனர்