‘தெர்மாகோல் விஞ்ஞானி’ – தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள் – அமைச்சர் செந்தில் பாலாஜி
சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு அவர்கள் இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு துறை மானியம் மீதான விவாதத்தில் பேசுகையில், மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் மின்சார மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அணில் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று பேசினார். இது அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் மின் தடை இல்லை என தெரிந்து ‘தடை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்கிறார் தெர்மோகோல் விஞ்ஞானி. எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மின் தடை இல்லை என தெரிந்து ‘தடை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்கிறார் தெர்மோகோல் விஞ்ஞானி.
எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) April 8, 2022