அனல்மின் நிலைய பணிகள் தொடக்கம் – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!
தூத்துக்குடி உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பணிகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்க திட்ட பணிகள் தொடங்கியது தமிழக அரசு. 2 மற்றும் 3-ஆம் நிலை ( 4*660) க்கான பணிகளுக்காக நிலத்தை கையகப்படுத்த அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உடன்குடியில் அனல் மின் நிலையங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அனல் மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால் தமிழக அரசின் நிதிநிலைமை மேலும் மோசமடையக் கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
கிராமங்களில் கையகப்படுத்தும் நிலத்திற்கு இழப்பீடு வழங்க ரூ.68.58 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலோ, பாதுகாப்பு ஏற்படுத்தும் பகுதிகளிலோ நிலம் கையகப்படுத்தக்கூடாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்தும் பணிக்காக அதனை கண்காணிக்க 78 பேரை நியமித்து மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.