தமிழகத்தின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தமிழகத்தின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.