வேளாண் சட்டம் நடைமுறைக்கு வந்த 3 வருடங்களில் ரேஷன் கடைகள் இருக்காது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கொட்டும் மழையிலும் விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வரும் அனைவருக்கும் பாராட்டையும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன். கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் அறவழியில் தொடர்ந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாத புதிய போராட்டம்.
இந்த போராட்டம் கைவிடப்படும் என்று எண்ணிய மோடியின் அரசு, அவர்கள் நெஞ்சாக்குழியில் உள்ளங்காலை வைத்து அழுத்துவது போல, குரல்வளையை பிடித்து நெறிப்பது போல விவசாயிகள் டெல்லியை முற்றிகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் ஒரு யுகபுரட்சி, வேளாண் சட்டங்கள் ஜனநாயக மரபுகளுக்கு விரோதமானவை, இது விவசாயிகளுக்கான போராட்டம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான போராட்டம். மோடி அரசை தூக்கி எறிவதற்கான ஒரு புரட்சி போராட்டம். வேளாண் சட்டம் நடைமுறைக்கு வந்த 3 வருடங்களில் ரேஷன் கடைகள் இருக்காது என பேசியுள்ளார்.
மேலும், இந்திய அரசமைப்பு சட்டம்தான் சமூக நீதியை உருவாக்குகிறது. ஆகவே இந்த அரசமைப்பு சட்டம் இருக்கும் வரையில் நாம் எப்பொழுதும் சகோதரத்தை பாதுகாக்க முடியாது, மேல் சாதி மேல் சாதிதான், கீழ் சாதி கீழ் சாதிதான், கீழ் சாதிக்கு உரிய வேலை கீழ் சாதி செய்யவேண்டும். கீழ் சாதி என்றால் வெறும் தலித் மட்டும் கிடையாது. பார்ப்பவர்களை தவிர மற்ற அனைவருமே தராதரத்தை தாழ்த்தி கீழ்ச்சாதிதான். அது சத்திரியனாக இருந்தாலும் கீழ்ச்சாதி தான், வைசியனாய் இருந்தாலும் சரி, சூத்ரியனாய் இருந்தாலும் சரி என்று பேசியுள்ளார். இதில், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் தோழர்கள் கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…