தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது – அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழகத்தில் இனி மின்தடை உறுதியாக இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தடையில்லா மின் விநியோகம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இனி மின்தடை உறுதியாக இருக்காது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும். மின்தடை தொடர்பாக சமூக வலைதளங்களில் பொத்தாம் பொதுவாக பதிவிட கூடாது என தெரிவித்துள்ளார்.
மேலும், மின் இணைப்பு எண்ணுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் மின் கட்டணம் தொடர்பாக நுகர்வோர் சேவை மையத்திற்கு வரும் புகார்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்த அவர், அதிமுக ஆட்சியில், எந்த புதிய மின் திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025