நாளை முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது – அமைச்சர் மனோ தங்கராஜ்

manothangaraj

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

சென்னையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை!

இந்த நிலையில், வெள்ள பாதிப்பால் பால் விநியோகிப்பதில் சிரமம் நீடித்து வரும் நிலையில், ஆவின் நிலையங்களில் மக்கள் வரிசையில் நின்று பால் வாங்கி வருகின்றனர். மீண்டும் பால் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்ற அச்சத்தில், மக்கள் கூடுதலாக பால் வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், இன்றைய தினம் நிலைமை நன்கு சீரடைந்து விட்டது. நாளை முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது. எனவே, பொதுமக்கள் பதட்ட மனநிலையில் அதிக அளவில் பால் வாங்கி இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அதுவே, பால் தேவைப்படும் பிறருக்கும் பால் கிடைக்க வழிவகுக்கும் என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்