”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!
கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், "சிறுவாணி தண்ணீர் போல் தவெக ஆட்சி சுத்தமாக இருக்கும்" என்றார்.

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேர்தல் பணிகளை வலுப்படுத்துவதற்காக நடத்தப்பட்டது. இந்த மாநாடு கோவை மாவட்டம் குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தவெக தலைவர் விஜய் இன்றும் கருத்தரங்கில் பங்கேற்று, கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அவரது உரையில், ”மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுகொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, மக்களை நேசி, மக்களுக்காக சேவை செய் என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் கருத்தை குறிப்பிட்டு பேசிய தவெக தலைவர் விஜய், ‘அண்ணா சொன்னதை நினைவில் வைத்து எந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாக மக்களை சந்தியுங்கள்’ என்றார்.
மக்கள் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்வோம். நேற்று பேசும்போது இந்த சந்திப்பு ஓட்டுக்காக நடப்பதல்ல என்று கூறினேன். சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை, மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால், எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம்.
தவெக ஊழல் இல்லாத ஆட்சியை தரும், சுத்தமான ஊழல் இல்லாத ஆட்சியை தருவதே தவெகவின் நோக்கம். தவெக ஆட்சி சுத்தமான அரசாக இருக்கும். தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது, வெளிப்படையான நிர்வாகம் இருக்கும். சிறுவாணி தண்ணீர் போல் தவெக ஆட்சி சுத்தமாக இருக்கும்” என்று கூறினார்.