“பிப்ரவரி வரை கொரோனா தொற்று அதிகரிப்பு இருக்கும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Default Image

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி மாதம் வரை கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும்,எனினும்,கொரோனா பற்றி மக்கள் அச்சப்படுவது அவசியமற்ற ஒன்று எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரானா அச்சத்தின் காரணமாக மதுரையின் கல்லுமேடு அருகே எம்ஜிஆர் காலனியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சாணி பவுடர் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்று,அதில் கொரோனா தொற்று உறுதியான பெண்,சிறுவன் உட்பட 2 பேர் பலியான நிலையில்,மேலும் 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,மதுரையில் கொரோனா அச்சத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேரில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்றும்,பிப்ரவரி மாதம் வரை கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும்,எனினும்,கொரோனா பற்றி மக்கள் அச்சப்படுவது அவசியமற்ற ஒன்று எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் சாணி பவுடர் விற்பனைக்கு விரைவில் தடை கொண்டு வரப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தோம்.இந்த நிலையில், மதுரையில் கொரோனா அச்சத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேரில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சி மற்றும் வருத்தம் அளிக்கிறது.கொரோனா வந்து விடும் என்பதற்காக தற்கொலை முயற்சி என்பது தேவையற்ற ஒன்று.எதுவாக இருந்தாலும் அதை எதிர்த்து வாழ்வதுதான் மனித வாழ்க்கையின் சிறப்பான விசயம்.எனவே,கொரோனா அச்சமோ,அது வந்து விட்டால் என்ன ஆகுமோ என்பது அவசியமற்ற ஒன்று.

ஒமைக்ரான் உலக அளவில் 27 லட்சம் அளவில் பரவியிருந்தாலும்,பெரிய அளவில் உயிர் பாதிப்பு இல்லை.எனவே,இதற்காக பயந்து தங்களது இன்னுயிரை மாய்த்து கொள்வது அவசியமற்றது.

மேலும்,கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் அளவுக்கு உயருகிறது.எனவே,தொற்று அதிகரிக்கும் சூழலில் தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு தவிர்க்க முடியாத ஒன்று.அந்த வகையில், வாரத்திற்கு ஒரு நாள் முழு ஊரடங்கு தற்போதைய சூழலில் அவசியமாக உள்ளது.

பிப்ரவரி வரை தொற்று அதிகரிப்பு இருக்கும் என்ற கணிப்பு இருக்கிறது.இது உச்சபட்ச நேரம் என்பதால் கவனம் தேவை.மேலும்,கொரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் அரசு எடுத்து வருகிறது.

எனினும்,மக்கள் முகக்கவசம் அணிதல்,சமூக இடைவெளியை பின்பற்றுதல் அவசியம்.கொரோனா உயிரிழப்பை தடுக்க கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் வேண்டும்”,என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்