இந்த இரு ஞாயிற்று கிழமை எந்த தளர்வுமின்றி பொதுமுடக்கம்.!

Default Image

ஜூன் 21, 28 ஆகிய இரு ஞாயிற்று கிழமைகளில் எந்த தளர்வுமின்றி பொதுமுடக்கம் அமலில் இருக்கும்.

கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர்  பழனிசாமி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன19 தேதி  முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் ஜூன் 21, 28 ஆகிய இரு ஞாயிற்று கிழமைகளில் எந்த தளர்வுமின்றி பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அதாவது 20.6.2018 நள்ளிரவு 12 மணி முதல் 22.6.2020 காலை 5 மணி வரையிலும் எந்தவிதக் தளர்வின்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும் . அதே போன்று 27.6.2011 நள்ளிரவு 12 மணி முதல் 29.6.2020 காலை 5 மணி வரையிலும் எந்தவித தளர்வின்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இந்த இரு நாட்களில் பால் வினியோகம்,மருத்துவமனைகள்,மருந்து கடைகள் மருத்துவமனையில் அவசர மற்றும் அமரர் ஊர்தி தவிர வேறு எதற்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கிப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்