ஜல்லிக்கட்டு நடத்த மறுத்ததால் பரபரப்பு..! போலீசார் மீது கல்வீச்சு..!

Default Image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மறுப்பு தெரிவித்ததால் நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சாலை மரியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து நடைபெற்ற போராட்டத்தில், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 10 க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு  நடத்த அனுமதி அளிக்குமாறு கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டனர்.

Krishnagiri protest

இந்நிலையில், ஓசூர் துணை ஆட்சியர் சரண்யா தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. ஜல்லிக்கட்டு தொடங்குவதையொட்டி, இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோபசந்திரம் கிராமத்தில் குவிந்தனர். மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளை அவற்றின் உரிமையாளர்கள் வாகனங்களில் அழைத்து வந்தனர்.

Krishnagiri protest 1

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்காததால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  போராட்டக்காரர்களை கலைக்குமாறு போலீசார் கூறியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Krishnagiri protest 3

போராட்டக்காரர்கள் சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த கல்வீச்சில் 10 க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.  பின்னர் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தண்ணீர் பீரங்கி மற்றும் தடியடி நடத்தியதில் போராட்டக்காரர்கள் கலைந்தனர். அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் தேசிய நெடுஞ்சாலையின் சுங்கச்சாவடியில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்