“அதிமுகவை காப்பாற்ற வாருங்கள்”- சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டர்கள் …!

அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற வாருங்கள் என்று சசிகலாவை வரவேற்று ராஜபாளையத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் அக்கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான பின்பு சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.ஆனால்,கடந்த சில மாதங்களாக அவரது ஆதரவாளர்களிடையே “நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்” என்று அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இதனையடுத்து,சசிகலாவுடன் பேசியதனால்,கட்சியின் விதிமுறைகளை மீறியதாக,அதிமுகவினர் சிலரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நீக்கியுள்ளனர்.
இந்நிலையில்,விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில்,சசிகலா அவர்களை,மீண்டும் அரசியலுக்கு வரவேற்கும் விதமாக,”அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் தியாக தலைவியே வாருங்கள்….இவண் விருதுநகர் மாவட்ட அஇஅதிமுக உண்மை தொண்டர்கள்’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன.
நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எங்க கிட்ட ரஷீத் இருக்காரு..கவலை கொஞ்சம் கூட இல்லை..ஆப்கானிஸ்தான் வீரர் அதிரடி பேச்சு!
February 21, 2025
ஜஸ்ட் மிஸ்!! நூலிழையில் உயிர் தப்பிய கங்குலி.! நடந்தது என்ன?
February 21, 2025
சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.360 குறைவு!
February 21, 2025