இந்த ஆட்சியில் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் – அமைச்சர் சேகர்பாபு
அறிவிப்புகளை முதல்வர் செயல்படுத்துகிறார் என்று இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு தகவல்.
தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு, தடுப்பூசிதான் கொரோனாவை வெல்லும் பேராயுதம், சென்னை இந்த முயற்சியில் வெற்றிநடை போடுகிறது, இந்தியாவிலேயே முன்மாதிரி மாவட்டமாக சென்னை விளங்கும் வகையில் அதன் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், ஒருசில காலங்களில் அறிவிப்புகளோடு நிறுத்திவிடுவார்கள், முதல்வர் அறிவிப்புகளை செயல்படுத்துகிறார் என்றும் அரசுக்கு சொந்தமான அனைத்து ஆக்கிரமிப்பு நிலத்தையும் திரும்ப பெற அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறி அமைச்சர், இந்த ஆட்சியில் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளதாக தெரிவித்தார்.