பட்டியலின தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதில் எவ்வித பிரச்சனையும் வரக்கூடாது – இறையன்பு

Default Image

தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதில் எவ்வித பிரச்சனையும் வரக்கூடாது என அனைத்து மாவட்ட  ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

குடியரசு தினவிழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட  ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற தகவல் கிடைக்கப்பெற்றதும், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு மற்றும் 1989 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதிய மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) ஆகிய சட்டப் பிரிவுகளை கருத்தில் கொண்டு 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களைக் கொண்டு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்வதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்