கபடி போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அல்லது அரசியல் தலைவர்களின் படங்களோ, சாதி ரீதியிலான அடையாளங்களோ இருக்கக்கூடாது மற்றும் சாதிய ரீதியிலான பாடல்கள் ஒளிபரப்பக்கூடாது எனவும் கபடி போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
இதுபோன்று கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இதில், ஆடல், பாடல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சி அல்லது மதத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேனர் வைக்க கூடாது என்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்போர் குட்கா, மதுபானங்கள் உட்கொள்ளக்கூடாது எனவும் ஆணையிட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் காலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
ஆப்கானிஸ்தான் : நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது…