குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை அரசு சுரண்டுவது இருக்கக்கூடாது. அரசு ஓர் முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும். – உயர்நீதிமன்றம்.
தமிழகத்தில் அண்மை காலமாக பல்வேறு மாவட்டங்களில் தூய்மை பணியாளர்கள் போராட்டங்கள் நடத்துவதும், தங்கள் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினரிடம் முன்வைத்து வருவதும் நடந்து வருகிறது. அதாவது தங்களுக்கு போதுமான ஊதியம் கிடைப்பதில்லை, அதிக வேலை பளு இருக்கிறது, வேலை நிரந்தரம் வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தூய்மை பணியாளார்கள் முன்னிறுத்து வருகின்றனர்.
இதில், கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அந்த வழக்கில், தங்களை போன்ற தூய்மை பணியாளர்களை பல சமயம் வாகனம் ஓட்டவும் கூறுகிறார்கள். ஆதலால் வாகனம் ஓட்டுனராக பணி உயர்த்த கோரி அதிகாரியிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர்கள் எங்கள் கல்வி தகுதியை காரணம் காட்டி ஓட்டுநராக பணியமர்த்த மறுத்துவிட்டார்கள் என கூறி வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குறைந்த ஊதியம் பெறும் தூய்மை பணியாளர்களை அதிக ஊதியம் பெறும் வாகன ஓட்டுனர்களாக பயன்படுத்தக் கூடாது எனவும், குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை அரசு சுரண்டுவது இருக்கக்கூடாது எனவும் கருத்து கூறினர். அரசு ஓர் முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும் என தங்களது கருத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன் வைத்தனர்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…