அரசு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும்.. ஊழியர்களை சுரண்ட கூடாது.! உயர்நீதிமன்றம் வருத்தம்.! 

Default Image

குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை அரசு சுரண்டுவது இருக்கக்கூடாது. அரசு ஓர் முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும். – உயர்நீதிமன்றம். 

தமிழகத்தில் அண்மை காலமாக பல்வேறு மாவட்டங்களில் தூய்மை பணியாளர்கள் போராட்டங்கள் நடத்துவதும்,  தங்கள் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினரிடம் முன்வைத்து வருவதும் நடந்து வருகிறது. அதாவது தங்களுக்கு போதுமான ஊதியம் கிடைப்பதில்லை, அதிக வேலை பளு இருக்கிறது, வேலை நிரந்தரம் வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தூய்மை பணியாளார்கள் முன்னிறுத்து வருகின்றனர்.

இதில், கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அந்த வழக்கில், தங்களை போன்ற தூய்மை பணியாளர்களை பல சமயம் வாகனம் ஓட்டவும் கூறுகிறார்கள். ஆதலால் வாகனம் ஓட்டுனராக பணி உயர்த்த கோரி அதிகாரியிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர்கள் எங்கள் கல்வி தகுதியை காரணம் காட்டி ஓட்டுநராக பணியமர்த்த மறுத்துவிட்டார்கள் என கூறி வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குறைந்த ஊதியம் பெறும் தூய்மை பணியாளர்களை அதிக ஊதியம் பெறும் வாகன ஓட்டுனர்களாக பயன்படுத்தக் கூடாது எனவும், குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை அரசு சுரண்டுவது இருக்கக்கூடாது எனவும் கருத்து கூறினர். அரசு ஓர் முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும் என தங்களது கருத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன் வைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்