முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே மோதல் போக்கு இருக்க கூடாது – அன்புமணி ராமதாஸ்
முதலமைச்சர் மற்றும் ஆளுநர் இடையே மோதல் போக்கு இருத்தல் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் பேட்டி.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார். அப்போது நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையே சுமுகமான உறவு இருக்க வேண்டும்.
அப்போதுதான் நிர்வாகம் சீராக இருக்கும். ஆளுநர் மற்றும் முதல்வர் இருவருக்கும் இடையே ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது. இருவரும் அரசியல் செய்யக் கூடாது ஏனென்றால் இதனால் தமிழ்நாட்டு மக்கள்தான் பாதிக்கப்படுவர். மக்களின் பிரச்சினைகளுக்கு தாமதம் இல்லாமல் உடனடியாக தீர்வு காண்பது ஆளுநரின் கடமை. அவர் அதை நிச்சயமாக செய்ய வேண்டும். முதலமைச்சர் மற்றும் ஆளுநர் இடையே மோதல் போக்கு இருத்தல் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.