என்னையும், என் குடும்பத்தையும் சினிமாவில் இருந்து பிரிக்க முடியாது என சிஐஐ கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பேச்சு.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் கருத்தரங்கை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். சிஐஐ கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய ஊடகம், பொழுதுபோக்கு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில், இயக்குனர்கள் மணிரத்தினம், ராஜமௌலி, நடிகர்கள் ஜெயராம், ஜெயம் ரவி மற்றும் ரமேஷ் அரவிந்த் உள்ளோட்டர் கலந்துகொண்டுள்ளனர். இரண்டு நாட்கள் இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரைத்துறையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளேன். முற்போக்கான திரைப்படங்கள் எடுக்க வேண்டும். புகைபிடிக்க கூடாது, மது அருந்த கூடாது என திரை படத்திற்கு முன்பு ஒளிபரப்புவது பாராட்டிற்குரியது. அதே போல் குட்கா கஞ்சா குறித்தும் விழிப்புணர்வு வாசகம் இடம் பெற வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், நானும் சினிமா துறையை சேர்ந்தவன் நான், நாடக மேடையிலும் நடித்தவன். முதல்வராக என்னை பார்க்க வேண்டாம். உங்களில் ஒருவனாக பாருங்கள். அப்பா முதல் எனது மகன் வரை சினிமா துறையில் தொடர்பு உண்டு. சினிமாவையும், திமுகவையும் பிரிக்க முடியாது போல் என்னையும், என் குடும்பத்தையும் சினிமாவில் இருந்து பிரிக்க முடியாது என்றார்.
கொல்கத்தா : 18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இன்றயை முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிகாக மாறியிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் ஒன்றிய அரசு அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும் என பினராயி விஜயன்…
சென்னை : சென்னையில் தற்போது நடைபெற்று வரும் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் கேரளா, பஞ்சாப்…