விஜய் மேல இந்த சந்தேகம் இருக்கு! அரசியல் கேள்விக்கு பார்த்திபன் சொன்ன பதில்!

விஜய் நல்லது செய்ய விரும்புகிறார் என அவருடைய அரசியல் குறித்த கேள்விக்கு பார்த்திபன் பதில் அளித்துள்ளார்.

vijay tvk

சென்னை : விஜயின் அரசியல் வருகை பற்றிய கேள்வி அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பார்த்திபனிடம் விஜயின் அரசியல் செயல்பாடு அவருடைய அரசியல் வருகை குறித்து உங்களுடைய கருத்து என்ன? என கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் ” என்னைப்பொறுத்தவரையில் நான் எல்லா விஷயங்களையும் பாசிட்டிவாக பார்ப்பேன்.

நண்பர் விஜய்க்கு அரசியல் வரவேண்டும் என்று அவருக்கு எந்த அவசியமும் இல்லை. சினிமாவில் பெரிய ராஜாங்கமே நடத்திக்கொண்டு இருக்கிறார்.  அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தான். வசூல் மன்னன் அவர் தான். 200 கோடி சம்பளம் வாங்குகிறார். இந்த மாதிரி சிம்மாசனத்தை விட்டுவிட்டு எதற்காக மக்கள் பிரச்சினைக்கு போகவேண்டும்.

அப்படி என்றால் அவர் எதோ நல்லது செய்ய விருப்பப்படுகிறார். எனவே, இப்போதே அவரை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக அவருக்கு வழிவிட்டு அவருக்கு ஆதரவு கொடுக்கவேண்டும். மாறுதல் ஒன்று தான் மாறாதது கடைசி வரை இவுங்க தான் ஆட்சி செய்யவேண்டும் என்றோ இவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்று ஒன்றுமில்லை. விஜய் செய்யும் விஷயங்கள் ஏற்கனவே நம்ம நடிகர்கள் செய்து கொஞ்சம் பின் வாங்கிய காரணத்தால் கொஞ்சம் பயம் இருக்கிறது.

அந்த சந்தேகம் எனக்கும் விஜய் மேல இருக்கு. இதெல்லாம் பேசுவார்கள் அதன் பிறகு உறுதியாக நிற்பார்களா இல்லையா என்று. அந்த சந்தேகத்தை ஊதி பெருசாக்கி ஒருத்தர் நல்லது செய்ய வருவதை தடுக்காமல் அவரை பயம்புறுத்தாமல் இருக்கவேண்டும். அவர் மிகவும் முனைப்போடு அரசியலில் செய்யலப்படட்டும்” எனவும் இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்