பகவத்கீதையை பாடத்திட்டத்தில் வைப்பது ஒன்றும் தவறில்லை – தினகரன்
பகவத்கீதையை பாடத்திட்டத்தில் வைப்பது ஒன்றும் தவறில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதையை ஒரு பாடத்திட்டமாக வைக்கும் அறிவிப்பு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பகவத்கீதையை பாடத்திட்டத்தில் வைப்பது ஒன்றும் தவறில்லை. இந்துக்கள் பலரும் குரானையும், பைபிளையும் மதிப்பதுபோல்தான் பகவத்கீதை மதிக்கப்படுகிறது. சட்டரீதியாக சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.