விவசாயிகளை பாதுகாக்க பட்ஜெட்டில் எதுவும் இல்லை – திருச்சி சிவா
விவசாயிகள், இளைஞர் நலன் பற்றி ஏதும் இல்லை என மத்திய பட்ஜெட் குறித்து திருச்சி சிவா விமர்சனம்.
2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை 5வது முறையாக நாடாளுமன்ற மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் உள்ளிட்ட 7 முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மத்திய பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, விவசாயிகளை பாதுகாக்க பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்றும் இளைஞர்களின் முக்கிய பிரச்சனையான வேலை வாய்ப்பை பெருக்க பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை என குற்றசாட்டினார்.
மேலும், யூரியா உர மானியம், நுறு நாள் வேலை திட்டத்துக்கான நிதி, ஊட்டச்சத்து திட்டத்துக்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளது என குற்றசாட்டிய அவர், கர்நாடகாவுக்கு கொடுத்த நிதி தமிழ்நாட்டுக்கு ஏன் கொடுக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.