கூட்டுறவு வங்கிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை – ரிசர்வ் வங்கி.!
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்தில் மூலம், இந்திய ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கூட்டுறவு வங்கிகள் கொண்டு வரப்படும்.
இந்நிலையில், இந்த அவசரச்சட்டத்தை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த இரு பழமையான கூட்டுறவு சங்கங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு பதிலளிக்கும் படி மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதால் இந்த வழக்கில் அவசரச்சட்டம் என்று குறிப்பிட்டதிற்கு பதிலாக சட்டம் என திருத்தம் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஆறு வாரம் காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்குகளை அபாரதத்துடன் தள்ளுபடி செய்யவும், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை.
கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துதல், செயல்திறனை மேம்படுத்துதல், முதலீட்டை அதிகப்படுத்துதல் ஆகியவை வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.